போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ரஜினி - அக்சய்குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படம் நவம்பர் 29-ந்தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து கமலை வைத்து இந்தியன்-2 படத்தை இயக்குகிறார் ஷங்கர். இந்த படத்திலும் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடிப்பதாக கூறப்படும் நிலையில், முதல் பாகத்தில் இந்தியாவில் இருந்து தப்பிச்சென்ற இந்தியன் தாத்தா, மறுபடியும் வித்தியாசமான கெட்டப்பில் ரீஎன்ட்ரி கொடுப்பதாக கூறப்படுகிறது. இதற்காக கமலின் கெட்டப் மாற்றப்படுகிறது.
இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது காஜல் அகர்வாலும் நடிப்பதாக இன்னொரு புதிய செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்தில் காஜலை அழைத்து, இயக்குனர் ஷங்கர் படம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.