விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு ஹிப் ஆப் தமிழா ஆதி இசை அமைத்து நடிக்கும் படத்தை மீசைய முறுக்கு படத்தை தயாரித்த சுந்தர்.சி.யே தயாரிக்கிறார். டி.பார்த்திபன் தேசிங்கு என்ற புதுமுகம் இயக்குகிறார். இவர், மான் கராத்தே, ரெமோ படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். ஆதி ஜோடியாக புதுமுகம் அனகா நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கரு பழனியப்பன், பாண்டியராஜன், கவுசல்யா, ஹரிஷ் உத்தமன், ஷாரா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஹாக்கி விளையாட்டை மையமாக கொண்ட இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. தலைப்பை வருகிற 4ந் தேதி அறிவிக்கிறார்கள். தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் படமாகி உள்ளது. கிளைமாக்ஸ் காட்சி ஹாக்கி விளையாட்டு போட்டியின் பின்னணியில் அமைகிறது.
இதற்காக 20 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. ஹாக்கி விளையாட்டுதான் கதை களம் என்றாலும், அதற்குள் நட்பு, காதல், குடும்பம், ஆக்சன் கலந்த பொழுதுபோக்கு படமாக தயாராகி உள்ளது.