நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் விவகாரம் கதைத் திருட்டு. 'சர்கார், 96' ஆகிய படங்களின் கதைகள் தங்களுடைய கதை என்று சிலர் புகார் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து மேலும் பலர் தங்களது கதைகளும் பறி போனது என சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பதிவிட்டு வருகிறார்கள்.
அவற்றோடு, உதவி இயக்குனர்கள் அடங்கிய வாட்சப் குழுக்களில் ஒரு தயாரிப்பாளரைப் பற்றிய தகவல் ஒன்று பரபரப்பாகப் பரவி வருகிறதாம். டிவி பெயரைக் கொண்ட மும்பையைச் சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிப்பாளர் அந்தஸ்தில் இருந்த ஒருவர் அப்போது படங்களைத் தயாரிப்பதற்காக கதைகளைக் கேட்ட விதத்தில் சுமார் 400 பவுண்டட் கதைகளை வாங்கினாராம். அவற்றில் சில கதைகள் மட்டுமே சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பித் தரப்பட்டதாம்.
அந்த நிறுவனம் தமிழில் எடுத்த தொடர் தோல்விப் படங்களால் தமிழ் சினிமாவே வேண்டாம் என மும்பைக்கே சென்றுவிட்டது. அந்நிறுவனத்தின் தயாரிப்பில் வந்த படங்கள் மீதும் கதைத் திருட்டு புகார்கள் உள்ளன. ஹாலிவுட் படக் கதைத் திருட்டு புகார் கூட இருக்கிறது என்கிறார்கள். அந்த 400 கதைகளில் சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட படத்தின் கதை கூட இருக்கிறது என்றும் தகவல் உண்டு.
அந்த நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட கதைகளை திரும்ப வாங்க முயற்சி செய்யுங்கள் என பல உதவி இயக்குனர்களும் தகவல்களைக் பரிமாறிக் கொண்டிருக்கிறார்களாம்.