‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சிவா இயக்கத்தில் இமான் இசையமைப்பில் அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் உரிமையை நயன்தாரா நடித்த 'அறம்' படத்தைத் தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ், நடிகை நயன்தாராவின் மேனேஜர் ஆக இருப்பவர். ஏற்கெனவே 'அறம்' படத்தைத் தயாரித்த போது, அந்தப் படத்தின் உருவாக்கம் பற்றிய பேட்டிகள் பலவற்றில் அந்தப் படம் சம்பந்தப்பட்ட பலரும் நயன்தாரா தான் முக்கிய முடிவுகளை எடுப்பார் என்ற விதத்தில் பேசியிருந்தார்கள்.
'அறம், குலேபகாவலி' ஆகிய இரண்டு படங்களை மட்டுமே தயாரித்த ஒரு புது நிறுவனத்திற்கு சுமார் 75 கோடி வரை செலவு செய்து எடுக்கப்படும் 'விஸ்வாசம்' படத்தின் உரிமை வழங்கப்பட்டிருப்பது திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
'விஸ்வாசம்' படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமை மட்டும் சுமார் 50 கோடி அளவிற்கு விற்கப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவ்வளவு தொகை கொடுத்து நயன்தாரா தரப்பில் இந்தப் படத்தை எப்படி வாங்கி வெளியிட்டு லாபம் பார்ப்பார்கள் என கோலிவுட்டில் உள்ள வினியோகஸ்தர்களே ஆச்சரியப்படுகிறார்கள்.