மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

பிரபுதேவா, லட்சுமி மேனன் நடிக்கும் படம் எங் மங் சங். வாசன் விஷூவல் மீடியா சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தயாரிக்கிறார்கள். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார், அம்ரீஷ் இசை அமைக்கிறார். தங்கர் பச்சான், ஆர்ஜே.பாலாஜி, கும்கி அஸ்வின், சித்ரா லட்சுமணன், காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து உள்பட பலர் நடிக்கிறார்கள். தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் கூறியதாவது:
படப்பிடிப்பு பெருமளவு முடிவடைந்தது. சமீபத்தில் இந்த படத்திற்காக பிரபுதேவா பாகுபலி வில்லன் பிரபாகருடன் மோதும் சண்டை காட்சிகள் சென்னை அருகே பொழிச்சலூர் காட்டு பகுதியில் 7 நாட்கள் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பில் ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் பங்கெடுக்க மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டது.
பிரபுதேவா இந்த படத்தில் குங்பூ மாஸ்டராக நடிக்கிறார். சண்டைகளை கற்று கொடுக்கும் தொழிலை செய்யும் கூட்டத்தின் தலைவனாக பாகுபலி வில்லன் பிரபாகர் நடிக்கிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களின் கொண்டாட்ட படமாக எங் மங் சங் இருக்கும். என்கிறார் இயக்குனர்.