ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
விக்ரம் நடித்துள்ள சாமி-2 சில தினங்களுக்கு முன்பு வெளியானது. 15 வருடங்களுக்கு முன்பு நடித்த சாமி படத்தில் நடித்த அதே எனர்ஜியுடன் இந்த படத்திலும் நடித்திருந்தார் விக்ரம். அதோடு தனது உடல்கட்டையும் கம்பீர தோற்றத்துக்கு மாற்றி தனது மெனக்கெடலை மீண்டும் நிரூபித்திருந்தார்.
இந்த நிலையில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் பாலா இயக்கத்தில் நடித்துள்ள வர்மா படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. அதுகுறித்து விக்ரம் கூறுகையில், எனது மகனை என்னை சேதுவில் நடிக்க வைத்த பாலா இயக்கும் படத்தில்தான் அறிமுகம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட் டேன். அது நிறைவேறி விட்டது.
மேலும், அவர் வர்மா படத்தை முடித்து விட்டு மீண்டும் அமெரிக்கா சென்று உயர் கல்வியை தொடரப்போகிறார். படிப்பு முடிந்ததும் அவரது அடுத்த படம் குறித்து அறிவிக்கப்படும்.
அதோடு, உங்கள் மகனின் பெயரை ஜூனியர் விக்ரம் என்று வைத்தால் என்ன? என்று நண்பர்கள் கேட்கிறார்கள். ஆனால் நான் அதை விரும்பவில்லை. என் மகன் என்னை வைத்து வரக்கூடாது. அவனுக்கென்று ஒரு சொந்த அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்கிறார் விக்ரம்.