'பைசன்' படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | ஆதங்கத்துடன் புலம்பும் முகமூடி நடிகை | நடிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நடிகை | மலையூரு நாட்டாமை மனச காட்டு பூட்டாம..: ‛டூரிஸ்ட் பேமிலி' கமலேஷ் | அனுபமாவின் அனுபவம் | 59 நாட்களில் தமிழ் கற்றேன்: ‛செம்பருத்தி பூ' ஸ்வாதி | நான் ஏன் பிறந்தேன், முத்து, மார்கன் - ஞாயிறு திரைப்படங்கள் | மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் |

தமிழ்சினிமா வரலாற்றில் அதிக வசூல் சாதனை செய்த படம் என்றால் பாகுபலி- 2 படம்தான். இப்படம் தமிழகத்தில் சுமார் 150 கோடியை வசூலித்து விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் தலா 72 கோடி ஷேர் கொடுத்தது.
அதற்கு அடுத்து தமிழகத்தில் வசூல் சாதனை செய்த படம் மெர்சல். 120 கோடி வசூலித்து 60 கோடி ஷேர் கொடுத்தது. இந்நிலையில், பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'சீமராஜா' படத்தில் 14 ஆம் நூற்றாண்டில் நடக்கும் காட்சிகள் 15 நிமிடங்கள் இடம்பெறுகின்றன.
இந்தப் படத்தில் இடம்பெறும் பீரியட் காட்சிகளை டிரைலரில் பார்த்துவிட்டு சமூக வலைதளங்களில் சிலர் கிண்டல் பண்ணினார்கள். சீமராஜா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், “இந்த டிரைலரின் கடைசி 3 ஷாட் பார்த்து, 'பாகுபலி மாதிரி இருக்கு' என சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தன. அது எங்களுக்கு, எங்கள் உழைப்புக்கு கிடைத்த பெருமை” என்று சிவகார்த்திகேயன் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக சீமராஜா படத்தின் முதல்நாள் வசூல் பாகுபலி 2 படத்தின் முதல்நாள் வசூலைவிட அதிகம் என்று சிலர் சமூகவலைதளங்களில் செய்தி பரப்பி வருகின்றனர். படத்துக்கு பில்ட்-அப் கொடுக்க வேண்டியதுதான்... அதுக்காக இப்படியா?