ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
நயன்தாரா நடித்த அறம் படத்தின் மூலம் கவனிக்கப்பட்டவர் கோபி நயினார். இப்படம் வரவேற்பை பெற்றதுடன், கோபி நயினாரின் அடுத்த படம் என்ன என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அறம் இரண்டாம் பாகம் இயக்குகிறார், மீண்டும் நயன்தாரா நடிக்கிறார் என்று செய்தி கூட வெளியானது. இந்த நிலையில் கோபி நயினார் இயக்கும் படம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோபி நயினாரின் அடுத்த படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோ, ஹீரோயின். இவர்களுடன் விஜி சந்திரசேகர், சங்கிலி முருகன், பி.எல்.தேனப்பன், ஆர்.என்.ஆர் மனோகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். பிரசாத் என்ற புதுமுகம் இசை அமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். சினிமா சிட்டி நிறுவனத்தின் சார்பில் கே.கங்காதரன், ஓ.எக்ஸ் புரொடக்சன் சார்பில் எஸ்.பி.விஜய் தயாரிக்கிறார்கள்.
"படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. தமிழ்நாட்டை வெளியில் இருந்து வந்தவர்கள் எப்படி தொடர்ந்து நசுக்குகிறார்கள். தமிழும், தமிழனும் எப்படி தங்கள் அடையாளத்தை இழந்து வருகிறது என்பதை சொல்லும் படம். ஜெய் ஒரு விளையாட்டு வீரனாக நடிக்கிறார். படப்பிடிப்புகள் சென்னையிலும் அதை சுற்றிய பகுதியிலும் நடக்கிறது" என்கிறார் கோபி நயினார்.