ஒரே டயலாக்கை வைத்து சூப்பர் டீலக்ஸ் டிரைலர் | கல்லூரி பேராசிரியராக நந்திதா | பிரபாஸ் மீது எனக்கு ஈர்ப்பு : வரலட்சுமி | திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடுகிறார் லட்சுமி மேனன் | "அம்மன், அருந்ததி" புகழ் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா காலமானார் | ராதிகா ஆப்தே வெளியிட்ட அதிரடி புகைப்படம் | ராட்சசன் - தெலுங்கு ரீமேக் ஆரம்பம் | சிவா இயக்கத்தில் விஜய் நடிக்க பேச்சு வார்த்தை ? | பிரியாணி விருந்து : அஜித் வழியில் சூர்யா | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பொன் மாணிக்கவேல் |
பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதி. பல வருடங்களாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். தற்போது, அவர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி உள்ளார். படத்தில் சிவகார்த்திகேயன் இளவரசனாக நடித்திருக்கும் காட்சிகள் 20 நிமிடங்கள் வருகிறது. இந்த காட்சிகளில் ஆடை வடிவமைப்பு பேசப்படும். அதே நேரத்தில் கிராமிய படங்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்வது எளிதல்ல என்கிறார். அவர் மேலும் கூறியதாவது:
வெறும் வேட்டி, சட்டை மட்டுமின்றி பாடல்கள் மூலமாக வண்ணங்கள் தெறிக்கும் வகையில் ஆடை வடிவமைப்பு இருக்க வேண்டும். அந்த உடை அமைப்பு பின்னணி அமைப்புக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். பொன்ராம் படம் என்றாலே, வண்ணமயமாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. கதை உருவாகும் காலக்கட்டத்திலேயே ஆடை வடிவமைப்பாளரையும் கலந்தாலோசித்து வரும் கலாச்சாரத்தை இயக்குனர் பொன்ராம் கொண்டு வந்து இருக்கிறார்.
இது எங்களது பணியை சுலபமாக்கியது. சிவகார்திகேயன் இந்த படத்தில் தனது உற்சாகத்துக்கு தோதான ஆடை அணிந்து இருக்கிறார். மேற்கத்திய மற்றும் பாரம்பரிய உடைகள் இரண்டுமே அவருக்கு பொருந்தி இருக்கிறது. இயக்குனர் பொன்ராமும், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியமும் மிகுந்த கவனத்துடன் உடைகளை தேர்ந்து எடுத்தார்கள்.
இன்று எல்லோராலும் பெரிதளவு விவாதிக்கபடும் இளவரசன் தோற்றத்துக்கு மிகவும் கடுமையாக உழைத்தோம். அவரின் உடைகள், அணிகலன்கள் ஆகியவற்றை தமிழ் மன்னர்களின் சிலைகள், ஓவியங்களில் இருந்து ஒப்பிட்டு எடுத்து உருவாக்கினோம்.