ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
ஜெயம் ரவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கிய படம் தனி ஒருவன். இந்தப்படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்க நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். அதன்பிறகு இப்படம் தெலுங்கில் ராம்சரண் - அரவிந்த்சாமி நடிப்பில் ரீமேக் ஆனது.
இந்தநிலையில், தற்போது தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் வேலைகளை தொடங்கியிருக்கிறார் மோகன்ராஜா. இந்த படத்திலும் ஜெயம்ரவியே நாயகனாக நடிக்க, நயன்தாராவும் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது.
ஆனால் இப்போது தனி ஒருவன் - 2வில் காஜல்அகர்வால், சாயிஷா சாய்கல் இருவரும் நாயகிகளாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மீண்டும் வில்லனாக நடிக்க அரவிந்த்சாமியுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.