ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் ஒளிப்பரப்பாகி வருகிறது. முதல்பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் டேனியலும் பங்கேற்று இருந்தார். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் மூலம் பிரபலமான இவர், இந்த நிகழ்ச்சியில் 70 நாட்களை கடந்து தொடர்ந்தார். நேற்று ரசிகர்கள் அளித்த ஓட்டின் அடிப்படையில் வெளியேறினார்.
டேனியல், டெனிஷா என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு டெனிஷா குடும்பம் சம்மதம் தெரிவிக்காத நிலையில் பிக்பாஸை விட்டு வெளியேறிய டேனியல், இன்று டெனிஷாவை பதிவு திருமணம் செய்து கொண்டார்.
உங்கள் அனைவரிடத்திலும் என் மனைவி டெனிஷா டேனியலை அறிமுகம் செய்வது மகிழ்ச்சி. எளிய முறையில் பதிவு திருமணம் செய்து கொண்டாம். குடும்ப பிரச்னை காரணமாக இந்த சந்தோஷத்தை நேரடியாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுடன் கணவன் - மனைவியாக எங்களின் புதிய வாழ்க்கை பயணத்தை துவங்குகிறோம் என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார் டேனியல்.