தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து | கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர் | டிசம்பர் 5ல் அகண்டா 2 ரிலீஸ் : தமிழில் பேசிய பாலகிருஷ்ணா | இன்னும் 2 மாதம் டல் சீசன் : பெரிய படங்கள் வராத நிலை | என் குழந்தைக்கு வயது 33 : ‛தேவர் மகன்' பற்றி கமல் பதிவு | ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்' | 'டியூட்' படத்தை அடுத்து 'பைசன்' வெற்றி விழா | அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் | பாலிவுட் என்று அழைக்காதீர்கள் : ஜெயா பச்சன் காட்டம் |

பெங்களூர் பொண்ணு ஷனம் ஷெட்டி. ப்ரீத்திக்கு நான் கியாரண்டி விளம்பரத்தின் மூலம் புகழ்பெற்றவர். அம்புலி என்ற 3டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு மாயை, விலாசம், கதம் கதம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி, சதுரம் 2, உள்பட பல படங்களில் நடித்தார். ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 23, டிக்கெட் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான வில்லா டூ வில்லேஜ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிலையில் திடீர் தயாரிப்பாளராகி இருக்கிறார் ஷனம் ஷெட்டி. மேகி என்ற படத்தை தயாரிக்கிறார். படத்தின் டைட்டிலையும், தயாரிப்பு நிறுவனத்தையும் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளார். விரைவில் படம் பற்றி முழு அறிவிப்பை வெளியிட இருக்கிறார். படத்தில் நடிக்கும், நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் படம் தயாராக இருக்கிறது.




