ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகி உள்ள படம் வட சென்னை. தனுஷ் உடன் சமுத்திரகனி, அமீர், கிஷோர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷூம், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் நடக்கின்றன. சமீபத்தில் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், வட சென்னை படத்தில் ஒவ்வொரு கேரக்டரின் பெயரும் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்று ஆண்ட்ரியாவின் கேரக்டரான சந்திரா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்ட நிலையில் இன்று சமுத்திரகனியின் குணா கேரக்டர், பர்ஸ்ட் லுக்குடன் வெளியிடப்பட்டுள்ளது.