போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் போது தென்னிந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு அடுத்து கேரளாவில்தான் அதிகம் வெளியாகின்றன. அடுத்து கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு பகுதிகளில் பல தியேட்டர்களில் வெளியாகின்றன.
சில தமிழ்ப் படங்கள் சென்னையில் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கையை விட பெங்களூருவில் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். பெங்களூருவில் அதிகமான அளவில் தமிழர்கள் வசிப்பதும் அதற்குக் காரணம். ஆனால், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தமிழ்ப் படங்கள அதிகமாக வெளியாவதில்லை. அவை டப்பிங் செய்யப்பட்டு வெளியானாலும் பெரிய வெற்றியைப் பெறுவதும் சமீப காலத்தில் குறைந்து வருகிறது. அதற்கு சமீபத்திய உதாரணமாக 'காலா, விஸ்வரூபம் 2' ஆகிய படங்களைச் சொல்லலாம்.
அதே சமயம், தெலுங்குப் படங்கள் தமிழ்நாட்டில் வெளியாவது, அதிலும் குறிப்பாக சென்னையில் வெளியாவது கடந்த சில வருடங்களில் அதிகமாகி வருகிறது. சில தெலுங்குப் படங்கள் தமிழ்ப் படங்களைக் காட்டிலும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகின்றன. 'அர்ஜுன் ரெட்டி' படப் புகழ் விஜய் தேவரகொன்டா நடித்துள்ள 'கீதா கோவிந்தம்' படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படம் சென்னையில் மட்டும் 25 தியேட்டர்களில் வெளியாகிறது.
கடந்த 3ம் தேதி ஒரே நாளில் 10 தமிழ்ப் படங்கள் வெளியான போது 'கஜினிகாந்த்' படத்தைத் தவிர மற்ற படங்களுக்கு சென்னையில் 5 தியேட்டர்கள் கூட கிடைக்கவில்லை. ஆனால், தெலுங்குப் படங்களுக்கு சென்னையில் 25 தியேட்டர்கள் எளிதாகக் கிடைக்கிறது என்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் குறைந்தது 5 தமிழ்ப் படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அவற்றிற்கு தியேட்டர்களைப் பெறுவதில் கடும் சிரமம் ஏற்படுகிறது என்பது சிறிய தயாரிப்பாளர்களின் குற்றச்சாட்டு. நேரடித் தெலுங்குப் படங்கள் அதிக தியேட்டர்களில் வெளியாவதைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே தமிழ்ப் படங்கள் சென்னையில் வெளியாக முடியும் என சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
தெலுங்கில் படங்களைத் தயாரித்து வரும் சில தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தான் சென்னையில் தெலுங்குப் படங்களை எளிதாக வெளியிட உதவுகிறார்கள் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.