2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து பிரபலமாகி வரும் நடிகை ப்ரியா பவானி சங்கர். நடிகர்கள் கமல் மற்றும் ரஜினி அரசியலில் குதித்து இருப்பது குறித்து கருத்து கூறியிருக்கிறார்.
'நடிகர்கள் கமலும், ரஜினியும் சினிமாவில் பிரபலமானவர்கள் தான். அதற்காக, அவர்களுக்குத்தான் ஓட்டளிக்க வேண்டும் என்பதில்லை' என்று ப்ரியா பவானி சங்கர் கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
நாம் எப்போதுமே நடிகர்களிடம் இருந்து, சில விஷயங்களை எதிர்பார்க்கிறோம். அவர்கள் திரையில் பேசும் வசனங்களோடு, அவர்கள் நிஜ வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறோம். அல்லது, இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், எல்லோருக்கும் அரசியல் ஆர்வம் இருக்கிறது; அரசியல் தெரிகிறது. ஒவ்வொருவரும், முகநூல் பக்கங்களில், தங்கள் கருத்துக்களைப் பதிவிடுவதில் இருந்து அதை புரிந்து கொள்ள முடிகிறது.
ரஜினி, கமலை எனக்கும் ரொம்பவும் பிடிக்கும். அதற்காக, அவர்கள் செய்வதெல்லாம் சரி என நான் சொல்ல மாட்டேன். அரசியல் என்பது, இரண்டு மணி நேரம் ஓடும் சினிமா படம் அல்ல. நடிகர்கள் கமலும், ரஜினியும் அரசியலில் குதித்து, ஐந்தாண்டு காலத்துக்கு தமிழகத்தின் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகிறார்கள். அது சரியா, தவறா என்பதெல்லாம் காலம்தான் முடிவெடுக்கும்.
என்னைப் பொறுத்த வரையில், யாருக்கு ஓட்டளிப்பது என்பதெல்லாம் எனது தனிப்பட்ட உரிமை. சினிமா வாழ்க்கைக்கும், அதற்கும் தொடர்பில்லை. சாதாரண குடிமகளாக, ஓட்டளிக்கும் விஷயத்தில் முடிவெடுப்பேன். ரஜினி, கமல் படம் ரிலீசானால், முதல் ஆளாக பார்ப்பேன். அதற்காக, அவர்களுக்குத்தான் ஓட்டளிப்பேன் என்பதெல்லாம் இல்லை.
இவ்வாறு அவர் மேலும் கூறியுள்ளார்.