ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
இயக்குநர் ஆர். கண்ணன் உற்சாகத்தில் இருக்கிறார். அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், உபேன் பட்டேல், சுஹாசினி மணிரத்னம் நடித்திருக்கும் பூமராங் படத்தை இயக்கிவரும் அவர், அந்தப் படத்தை முடித்த பிறகு அடுத்தப்படத்துக்கு ஹீரோவைத் தேட வேண்டிய அவசியம் இல்லை.
'இவன் தந்திரன்' படத்தை தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கியுள்ள படம் 'பூமராங்' படத்திற்கு 'அர்ஜுன் ரெட்டி' படப்புகழ் ரதன் இசை அமைத்துள்ளார். இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கி, தயாரித்துள்ள 'பூமராங்' அடுத்த மாதம் ரிலீசாகிறது.
பூமராங் படத்தை தொடர்ந்து கண்ணன் இயக்கும் அடுத்த படத்திலும் அதர்வாவே கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். அதுமட்டுமல்ல, 'பூமராங்' படத்திற்கு இசை அமைத்த ரதனே இப்படத்திற்கும் இசை அமைக்கவிருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் துவங்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஆர்.கண்ணன். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகளை 'பூமராங்' படம் ரிலீசான பிறகு வெளியிட திட்டமிட்டுள்ளார். ஒரு படம் தயாரிப்பில் இருக்கும்போதே அதே கூட்டணி அடுத்தப்படத்திலும் இணைவது புதிய விஷயமில்லை.
பூமராங் நம்பிக்கை தரும் படமாக உருவாவி இருப்பதால் இந்தக் கூட்டணி அடுத்தப்படத்திலும் இணைய முடிவு செய்திருக்கிறது.