வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
வெற்றிமாறன் உதவியாளர் ராஜ்குமார் இயக்கி உள்ள படம் அண்ணனுக்கு ஜே. அட்டகத்தி தினேஷ் ஹீரோவாகவும், மகிமா நம்பியார் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். அடிமட்ட தொண்டன் ஒருவன் எப்படி அரசியலில் பெரிய ஆளாக உயருகிறான் என்பதே படத்தின் ஒருவரிக்கதை.
இப்படம் குறித்து தினேஷ் கூறுகையில், 3 வருட உழைப்பு இந்தப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இன்றைய சூழலில் தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல தலைவன் தேவை. வாய்ப்பு வந்தால் எதிர்காலத்தில் நானும் அரசியலுக்கு வருவேன். எல்லாவற்றையும் காலசூழல் தான் தீர்மானிக்கும் என கூறியுள்ளார்.