‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் சாத்னா டைட்டஸ். இவர், பிச்சைக்காரன் படத்தை விநியோகம் செய்த கார்த்திக்கை காதலித்தார். ஆரம்பத்தில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டார் சாத்னா. இந்நிலையில் சாத்னா, கர்ப்பமாக இருந்து வந்தார். அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த தகவல் இப்போது தான் தெரியவந்துள்ளது. குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா விரைவில் நடைபெற இருக்கிறது.
குழந்தை பிறப்பால் சினிமாவிற்கு தற்காலிகமாக ஓய்வு கொடுத்திருக்கிறார் சாத்னா.