என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

ஆரம்பத்தில் வெற்றி படங்களாக கொடுத்த விக்ரம் பிரபுவிற்கு சமீபத்திய பல படங்கள் தோல்வியை கொடுத்தன. தற்போது துப்பாக்கி முனை, அசுரகுரு படங்களில் நடித்து வருகிறார்.
கட்டாயம் ஒரு வெற்றி தேவை என்கிற நிலையில் இருக்கும் விக்ரம் பிரபுவுக்காக அடுத்த படத்தை தயாரிக்கிறார் கலைப்புலி தாணு. ஏற்கனவே இவர் விக்ரம் பிரபுவின் அரிமா நம்பி படத்தை தயாரித்தார். இந்த படத்திற்கு 60 வயது மாநிறம் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். ராதாமோகன் இயக்குகிறார். இளையராஜா இசை அமைக்கிறார். விஜி ஒளிப்பதிவு செய்கிறார், பா.விஜய், பழனிபாரதி பாடல்களை எழுதுகிறார்கள்.
விக்ரம் பிரபுவுடன் சமுத்திரகனி, பிரகாஷ்ராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். பிரகாஷ்ராஜ், 60 வயது முதியவராக நடிக்கிறார். இது தந்தைக்கும், மகனுக்குமான பாசப் போராட்ட கதை என்கிறார்கள்.