மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
முன்னாள் முதல்வரும், தி.மு.கழக தலைவருமான கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அனைத்துக் கட்சி தலைவர்கள், திரையுலகினர் சந்தித்து வருகிறார்கள். கருணாநிதியை சந்திக்க முடியாவிட்டாலும் ஸ்டாலினிடம் நலம் விசாரித்து வருகிறார்கள்.
கருணாநிதியை சந்திக்க வரும் தலைவர்கள் தி.மு.கவின் செயல் தலைவரும், கருணாநிதியின் இளைய மகனுமான ஸ்டாலின், மற்றும் கனிமொழியை சந்திக்கிறார்கள். ஆனால் ரஜினி நேற்று இரவு கருணாநிதியை சந்திக்க வந்தார். அவர் ஸ்டாலினை சந்தித்ததோடு, மு.க.அழகிரியையும் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ரஜினி அரசியலுக்கு வர இருப்பதால் தி.மு.க ரஜினியிடமிருந்து விலகியே இருக்கிறது. அதோடு அழகிரியும் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். அழகிரி ரஜினியின் ரசிகர். பலமுறை ரஜினியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அந்த நட்பின் அடிப்படையில் அழகிரியை ரஜினி சந்தித்ததாக கூறப்படுகிறது.