ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு, தமிழ் சினிமாவில் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு ஏமாற்றியவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. ஸ்ரீரெட்டி போலீஸாரிடம் செல்லாமல் விளம்பரம் தேடி வருகிறார் என அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நடிகை ஸ்ரீரெட்டி, திரைப்பிரபலங்களை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார் வராகி.
இந்நிலையில், வராகிக்கு ஸ்ரீரெட்டி பதிலடி கொடுத்திருக்கிறார். அதில், "அவதூறாக பேசிய வராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள். என்னிடம் அடி வாங்க நீங்கள் தகுதியானவர் தான். பாதிக்கப்பட்ட பெண் நான். எனக்கு மரியாதை அளிப்பதற்கு பதிலாக, என்னை வைத்து மலிவான விளம்பரம் தேடுகிறார் என பேஸ்புக்கில் கூறியுள்ளார்.
மேலும் மற்றொரு பேஸ்புக் பதிவில், நான் பாலியல் தொழிலாளி கிடையாது. என்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு உணவு கூட தராமல் வெறும் வயிற்றோடு வெளியே அனுப்பினார்கள். யாரும் ஒரு பைசா கூட தரவில்லை என தெரிவித்திருக்கிறார்.