ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
கமல், பூஜாகுமார், ஆண்ட்ரியா நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் ஆக., 10ல் வெளியாகிறது. படம் குறித்து கமல் கூறியதாவது : விஸ்வரூபம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக விஸ்வரூபம் 2 படம் இருக்கும். சண்டைக்காட்சிகள் அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும். நான் எடுத்தது ஒரு படம் தான். அதை இரண்டாக தந்துள்ளேன்.
எல்லாம் நன்மைக்கே
ஹேராம் படத்திற்கு அடுத்தக்கட்ட கதையே விஸ்வரூபம். 2007-லேயே இப்படத்தின் கதையை எழுதி விட்டேன். முன்னதாக தசாவதாரம், மன்மதன் அம்பு படம் செய்ய வேண்டி இருந்தது. படம் வெளியாவதற்கு ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் நன்மைக்கே. தாமதமே படத்திற்கு விளம்பரமாக அமைந்து விட்டது. கதை நன்றாக வந்துள்ளது.
எதிர்ப்பு வராது
நான் அரசியலுக்கு வரும் முன்பே இந்த படத்தை எடுத்து முடித்து விட்டோம். அரசியல் கருத்து எதுவும் படத்தில் திணிக்கவில்லை. முன்பு இருந்த கருத்து வேறுபாடு, எதிர்ப்பு இந்த படத்திற்கு வராது. அப்படி வந்தால் அது தமிழக அரசியல்வாதிகளின் கெட்டிக்காரத்தனமாக இருக்காது. ரசிகர்களின் மனநிலையை பொறுத்து 3-ம் பாகம் வரலாம். திரைத்துறையில் வரும் நவீன தொழில்நுட்பத்தை வராமல் தடுக்கக்கூடாது. அது வந்தே தீரும்.
நடிப்பதை நிறுத்துவேன்
அரசியல்வாதிகள் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி கொண்டு வேலை பார்க்க முடியாது. லட்ச ரூபாயை சுருட்டிக் கொண்டு ஒரு ரூபாய் சம்பளம் வாங்குவது உட்டாலங்கடி வேலை. என் தொழில் வேறு; அரசியல் வேறு. நான் வசதியாக இருக்கிறேன். நான் திருட மாட்டேன். அதை தான் மக்களும் நம்புகிறார்கள். அரசியல் வேறு; தொழில் வேறு. எம்.எல்.ஏ., சீட் வந்தால் கூட நான் நடிப்பதை நிறுத்த வேண்டும். எம்.எல்.ஏ., ஆகி கூட எம்ஜிஆர் நடித்துள்ளார். இடைஞ்சலாக இருக்கும் போது பட்சத்தில் படத்தில் நடிப்பதை நிறுத்தி விடுவேன்.
அரசுக்கு அவமானம்
ஷங்கர் அழைத்தவுடன் இந்தியன் 2 படத்தில் நடிக்க சென்று விடுவேன். நான் தமிழகத்தை விட்டே செல்வேன் என சொன்னது அரசுக்கு தான் அவமானம். நாட்டை விட்டு செல்வேன் என சொன்னேன் ஏன், அந்தளவு நாடு கேவலமாக இருந்தது. சபாஷ் நாயுடு படம் 40 சதவீதம் முடிந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.