2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சமீபகாலமாக தனது அதிரடியான பாலியல் புகார்களால் தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லாது தமிழ் திரையுலகையும் ஆட்டம் காண வைத்து வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. வாராகி என்பவர் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் மலையாள சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஸ்ரீரெட்டி, "மலையாள நடிகை ஒருவர் பாதிக்கப்பட்டபோது ஒட்டுமொத்த திரையுலகமே அவருக்கு ஆதரவாக நின்றது. ஆனால் நான் தனி மனுஷியாக எந்த ஆதரவுமின்றி இருக்கிறேன்.
என் பெற்றோர் கூட என் பக்கம் இல்லை. தொடர்ந்து என்னை ஒரு விலைமாது போலவே சித்தரித்து வருகின்றனர். இதனால் தற்கொலை எண்ணமே மேலிடுகிறது. எனக்கான நீதி கிடைக்காத பட்சத்தில் என்னை நானே அழித்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை" என கண்ணீர் மல்க கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி.