‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கியவர் மஜீத். தற்போது டார்ச்லைட் என்ற படத்தை இயக்கி உள்ளார். சதா முதன்மை ரோலில், பாலியல் தொழில் செய்யும் வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் மெட்ராஸ் புகழ் ரித்விகாவும் நடித்திருக்கிறார். இப்படம் சென்சாரில் போராடி சான்று பெற்றிருக்கிறது.
இதுகுறித்து இயக்குநர் மஜீத் கூறியதாவது.... நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட் அடித்து பாலியல் தொழில் செய்யும் பெண்கள் பற்றிய கதை. 90களில் நடப்பது போன்று இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இந்த கதையை கேட்ட நடிகைகள் பலரும் நடிக்க தயங்கினார்கள். சதா மட்டும் தைரியமாக நடிக்கச் சம்மதித்தார்.
வறுமையைப் பயன்படுத்தி பெண்ணினத்தை இந்தச் சமூகம் எப்படிப் படுகுழியில் தள்ளி அவர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இந்தக் கதை சார்ந்து பலர் உண்மைச் சாட்சியங்களாக உள்ளனர். அப்படிப்பட்ட பலரையும் சந்தித்து வீடியோவில் பேசி பதிவு செய்து படமாக்கினேன்.
மும்பையில் சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ஏ சான்று வழங்கியுள்ளனர். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே படமாக்கி உள்ளேன் படம் சிறப்பாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கு பிடித்த படமாக இருக்கும். படத்தில் சதா, ரித்விகா இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இவர்களுடன் புதுமுகம் உதயா, தினேஷ் குமார், இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா, ரங்கநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சென்சார் சென்றபோது இங்கு சென்சார் சான்றிதழ் தர மறுத்தார்கள். இங்கு போராடிப் பார்த்து வேறு வழியில்லாமல் பிறகு நான் மும்பை சென்று ஏ சான்றிதழ் பெற்றுள்ளேன்" என்றார்.
விரைவில் டார்ச் லைட் ரிலீஸ் ஆகிறது.