ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ் சினிமாவில் புதிய படங்கள் திரைக்கு வந்தால் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்பதை, யு டியூபில் அந்தப் படங்களின் டீசர், டிரைலர், பாடல்கள் ஆகியவற்றிற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கிறது என்பதைப் பொறுத்து தற்போது யூகித்துக் கொள்கிறார்கள். அந்த விதத்தில் கடந்த சில மாதங்களில் பெரிய நடிகர்களின் படங்கள் அளவிற்கு அதிகப்படியான பார்வைகளை 'தமிழ்ப் படம் 2' சம்பந்தப்பட்ட வீடியோக்கள் பெற்று வருகின்றன.
அந்தப் படத்தின் டீசர், பாடல் ஆகியவற்றிற்கு எதிர்பார்த்ததற்கும் மேலான வரவேற்பு கிடைத்தது. அதனால், இந்தப் படத்தை வெளியிட தியேட்டர்காரர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் முதல் பாகம் வெளிவந்து 8 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், கடந்த ஐந்தாறு வருடங்களாக யு டியூபில் வெளிவரும் பல வீடியோக்களுக்கு 'தமிழ்ப்படம்' தான் முன்னுதாரணமாக இருந்தது. சினிமா காட்சிகளை வைத்து தற்போது பலரும் உருவாக்கி வெளியிடும் வீடியோ மீம்ஸ்கள் கூட பல லட்சம் பார்வைகளை யு டியூபில் பெற்று வருகின்றன.
இந்த மீம்ஸ்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்த 'தமிழ்ப்படம்' படத்தின் இரண்டாவது பாகமான 'தமிழ்ப்படம் 2' நாளை மறுநாள் வெளியாக உள்ளது. தற்போதைய மீம்ஸ்களை விடவும் இப்படத்தின் காட்சிகள் சிறப்பாக இருந்தால்தான் படம் வெற்றி பெறும். நேற்று வெளியிடப்பட்ட 'டெலிடட் சீன்' பற்றி பல்வேறு விதமான கருத்துக்கள் இருந்தாலும் அதுதான் தற்போது யு டியூப் டிரென்டிங்கிலும் முதலிடத்தில் உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை 'தமிழ்ப்படம் 2' நிறைவேற்றினால் சில நாட்களிலேயே படம் லாபத்தைக் கொடுத்துவிடும் என்கிறார்கள்.