ஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கதில் விக்ரம், நடிக்கும் 'துருவநட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விக்ரமுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
சிம்ரன், ராதிகா சரத்குமார் முதலானோர் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் தொடங்கப்பட்டு சில வருடங்களாகியும் படம் இன்னும் முடிவடையவில்லை. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது.
இதைத்தொடர்ந்து துருவ நட்சத்திரம் படத்தில் இடம் பெறும் 'ஒரு மனம்...' என்று துவங்கும் பாடலை மிக விரைவில் வெளியிட உள்ளனர். இந்த தகவலை டுவிட்டரில் இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கும் இந்த படம் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது.
இன்னொரு பக்கம், தனுஷ் நடிப்பில் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு வேலைகளையும் முடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார் கவுதம் மேனன்.