ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா |

கொடிவீரன் படத்தை அடுத்து சசிகுமார் நடித்துள்ள படம் அசுரவதம். மருதுபாண்டியன் இயக்கியுள்ள இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அட்டகத்தி நந்திதா நடித்துள்ளார். இந்த படத்தில் தனது வேடம் குறித்து நந்திதா கூறுகையில், அசுரவதம் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு முதலில் காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ்க்குத் தான் சென்றது. அவர் சில படங்களில் பிசியாக இருப்பதால் அவர் தான் இந்த படத்தில் நடிக்க எனக்கு சிபாரிசு செய்தார்.
இந்த படத்தில் சசிகுமாரின் மனைவி வேடத்தில் நடித்திருக்கிறேன். இந்த வேடத்தில் நடிக்க பல நடிகைகளிடம் கேட்டும் யாரும் நடிக்க முன்வரவில்லை என்று சொன்னார்கள். காரணம் சசிகுமாருக்கு மனைவி என்பதோடு, சில நடிகைகள் நடிக்க தயங்கும் வித்தியாசமான காட்சிகளும் உள்ளது.
என்னைப் பொறுத்தவரை இமேஜ் பார்க்காமல் சவாலான கதைகளில் நடிக்க தயாராகி விட்டதால், எந்தமாதிரி வேடம் என்றாலும் ஓகே என்று சொல்லித்தான் நடித்தேன். அதனால் இந்த படத்தில் நான் குறைவான நேரமே வந்தபோதும், எனது வேடம் பேசப்படும் வகையில் உள்ளது என்கிறார் நந்திதா.