ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஸ்கெட்ச், சாமி-2 படங்களில் நடிப்பதற்கு முன்பே விக்ரம் நடிக்க தொடங்கிய படம் துருவநட்சத்திரம். நிதி சிக்கல் உள்ளிட்ட பல பிரச்னைகளால் படம் இன்னும் முடியாமல் உள்ளது. ஸ்கெட்ச் ரிலீஸாகி, சாமி 2-வும் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.
சமீபத்தில் துருவ நட்சத்திரம் படத்தின் மூன்றாவது டீஸரை வெளியிட்டார் கவுதம் மேனன். தற்போது படத்தினை விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ள கவுதம் மேனன், படத்தை அக்டோபரில் வெளியிட எண்ணியுள்ளார்.
விக்ரம் உடன் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளாக நடித்துள்ள இந்த படத்தில் சிம்ரன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.