ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரெளத்திரம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஸ்மோரா படங்களை இயக்கிய கோகுல், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து இயக்கி உள்ள படம் ஜூங்கா. விஜய் சேதுபதியுடன் சாயிஷா சைகல், மடோனா செபாஸ்டியன், யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். சித்தார்த் விபின் இசையமைக்க, விஜய் சேதுபதி தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகி உள்ளது.
"எப்பவுமே ஒருவனை கீழே தள்ளிவிட்டு நாம மேல வர வேண்டும் என்பது தவறு, நாம மேலே ஏறி வந்த பிறகு இடமில்லை, கொஞ்சம் இறங்கி கொள்ளுங்கள் என நாசூக்காக சொன்னால் அவர்களே இறங்கிவிடுவார்கள்" என்கிற வசனத்தோடு டிரைலர் ஆரம்பிக்கிறது.
விஜய் சேதுபதி இதிலும் டானாக, காமெடி கலந்த ரோலில் நடித்திருக்கிறார் என டிரைலர் பார்க்கும்போதே தெரிகிறது. விஜய் சேதுபதி நடித்த படங்களிலேயே இது தான் ஹைடெக் படமாக உருவாகி உள்ளது. படத்தின் முக்கால்வாசி காட்சி வெளிநாடுகளில் படமாகி உள்ளது.
சிரீயஸான ஆக்ஷ்ன் காட்சிகளில் கூட காமெடி கலந்திருப்பது மூலம் இது காமெடி கலந்த டான் படம் என தெரிகிறது. டிரைலரின் இறுதியில் "டான் டாவடிக்க கூடாது" என பஞ்ச் உடன் டிரைலர் முடிகிறது.