‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அபியும் நானும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன். அதன் பிறகு உன்னைப்போல் ஒருவன், தீயா வேலை செய்யணும் குமாரு, தனி ஒருவன், நாயகி உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது வணங்காமுடி படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமும் பிரபலமானார். கணேஷ் வெங்கட்ராமன் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின் விளம்பர படத்தில் நடித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
நான் ஹார்பிக்கின் “ஸ்வச் பாரத்” பிரச்சாரத்தின் தென்னிந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறேன். இதன் சார்பில் எடுக்கப்பட்ட விளம்பரத்தில் அக்ஷ்ய்குமாருடன் இணைந்து நடித்திருக்கிறேன். அக்ஷ்ய் குமாரின் மிகப்பெரிய ரசிகன் நான். இப்போதும் அவர் மது அருந்தாமல், எந்த தீய பழக்கங்களும் இல்லாமல், உடலை கட்டுப்பாட்டோடு வைத்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. அவரோடு சேர்ந்து பணியாற்றியது மறக்க முடியாத ஓர் அனுபவம்.
தூய்மை இந்தியா திட்டத்தின் முதல் படி நமது வீட்டை நாம் சுத்தமாக வைப்பதிலிருந்து தான் துவங்குகிறது. இந்திய அரசாங்கத்துடன் “ஹார்பிக்“ நிறுவனம் இந்த திட்டத்துக்காக கைகோர்த்துள்ளது சிறப்பானதாகும் என்றார் கணேஷ் வெங்கட்ராமன்.