‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
முதன்முதலாக மகாநதி மூலம் டோலிவுட்டில் நுழைந்த துல்கர் சல்மானுக்கு அந்தப்படம் ஏகப்பட்ட பாராட்டுக்களை வாங்கித்தந்துவிட்டது. மேலும் பாலிவுட்டிலும் முதன்முதலாக அடியெடுத்து வைத்துள்ள துல்கர் சல்மான், 'கர்வான்' என்கிற படத்தில் நடித்துள்ளார். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான ஆகர்ஷ் குரானா என்பவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தவிர இந்தப்படத்தில் இர்பான்கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக மிதிலா பார்க்கர் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷுடன் 'புரூஸ்லீ' படத்தில் கதாநாயகியாக நடித்த க்ரீத்தி கர்பந்தா துல்கருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப்படம் வரும் ஆக-10ஆம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்து இருந்தது.
இந்தநிலையில் இரண்டு வார பாக்ஸ் ஆபீஸ் வசூலை குறிவைத்து ஒரு வாரம் முன்னதாகவே அதாவது ஆக., 3ஆம் தேதியே இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.