ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் சாமி-2. இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், மே 26-ம் தேதியான இன்று டிரைலர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதை கருத்தில் கொண்டு சாமி 2 டிரைலரை தள்ளி வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக சாமி 2 தயாரிப்பாளர் சிபு தமின் டுவிட்டரில், "தற்போது கொண்டாட்டமான நேரமல்ல, ரசிகர்களின் அனுமதியோடு சாமி 2 டிரைலரை தள்ளி வைத்துள்ளோம். தூத்துக்குடி சம்பவத்திற்காக பிரார்த்தனை செய்வோம், இனி இதுபோன்று நடக்காமல் இருக்க..". என பதிவிட்டிருக்கிறார்.