ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன். தற்போது ராம் இயக்கத்தில் மம்முட்டி நடிக்கும் பேரன்பு படத்தை தயாரித்து வருகிறார். சில படங்களில் நடித்தும் வருகிறார். தயாரிப்பாளர் சங்க செயலாளர் மற்றும் துணைத் தலைவர் பதவியில் இருந்த தேனப்பன், தற்போது செயற்குழு உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் தேனப்பன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தற்போதைய நிர்வாகம் தனியாக ஆபீஸ் நடத்தி பணத்தை விரயம் செய்கிறது. சில மூத்த உறுப்பினர்களுக்கு காரணம் இன்றி பென்சனை நிறுத்தி உள்ளது. காப்பீட்டுத் தொகையை குறைத்தது. பட வெளியீட்டில் பாரபட்சம் காட்டுகிறது உள்ளிட்ட பல தவறுகளை செய்து வருகிறது. செயற்குழு ஒப்புதல் இன்றி தன்னிச்சையாக செயல்படுகிறது. அதனால் இந்த நிர்வாகத்தின் கீழ் பணிபுரிய விருப்பம் இல்லாமல் எனது பதவியை ராஜினாமாக செய்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.