ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாடகர் மற்றும் நடிகர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் முதல் படம் கணா. இதனை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன், முனீஷ்காந்த், இளவரசு ஆகியோர் நடிக்கிறார்கள். இது பெண்கள் கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்கும் ஒரு கிராமத்து பெண்ணின் கதை. அந்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவரது தந்தையாக சத்யராஜும், காதலனாக தர்ஷனும் நடிக்கிறார்கள்.
இதில் ஐஸ்வர்யா கிரிக்கெட் விளையாடும் காட்சிகளும், அதற்கான பயிற்சி பெறும் காட்சிகளும் நிறைய உள்ளன. இதற்காக ஐஸ்வர்யா ராஜேசுக்கு முறைப்படி கிரிக்கெட் பயிற்றி அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான டேவ் வாட்மோர் ஐஸ்வர்யாவுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறார். இதற்காக அவர் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். பயிற்சி சென்னையில் நடந்து வருகிறது.