ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமானவர் மனீஷா. அதன்பிறகு ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் உள்பட சில படங்களில் நடித்தார்.
தற்போது நடன மாஸ்டர் தினேஷ் நாயகனாக நடித்துள்ள ஒரு குப்பைக்கதை என்ற படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார் மனீஷா. இந்த படத்தில் இதுவரை நடிக்காத ஒரு அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறேன் என்கிறார் மனீஷா.
பூங்கொடி என்ற ஸ்லம் ஏரியா பெண்ணாக, ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறேன். ஒரு கட்டத்தில் எனது கதாபாத்திரம் நெகட்டிவாக மாறுகிறது. முதன்முறையாக இரண்டு விதமான பர்பாமென்ஸ் கொடுத்து நடித்துள்ளேன். எனது கேரியரில் ஒரு குப்பைக்கதை நிச்சயம் பேசப்படும் படமாக இருக்கும் என்கிறார்.