டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

மலையாளத்திலிருந்து தமிழ்ப் பக்கம் தாவிய கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினி முருகன்' படம் மாபெரும் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தார்.
தனுஷுடன் 'தொடரி', மீண்டும் சிவகார்த்திகேயனுடன் 'ரெமோ', விஜய்யுடன் 'பைரவா', சூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்களில் நடித்தார். 'ரஜினி முருகன்' படத்திற்குப் பிறகு அவர் நடித்த படங்கள் கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்தார்.
தற்போது தமிழில் “சாமி 2, சண்டகோழி 2, விஜய்யுடன் ஒரு படம்' என மிகவும் பிஸியாக இருக்கிறார். தெலுங்கில் அவர் நடித்த 'மகாநதி' படம் அவருக்கு அங்கு தனிப் பெயரையும், ஒரு மரியாதையையும் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. ஏற்கெனவே தெலுங்கில் அவர் நடித்த 'நேனு ஷைலஜா, நேனு லோக்கல்' ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. தற்போது 'மகாநதி'யும் வெற்றிப் படமாக அமைந்துவிட்டதால் அவரைத் தேடி தற்போது பல புதிய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
'மகாநதி' படக்குழுவினரை ஒவ்வொரு நாளும் ஒரு திரைப்பிரபலம் நேரில் அழைத்து பாராட்டி வருகிறார். கீர்த்தி தற்போது விஜய் பட ஷுட்டிங்கில் இருப்பதால், சில நாட்கள் கழித்து ஐதரபாத்தில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.