ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
லைகா நிறுவனம் தயாரிக்கும் படம் கோலமாவு கோகிலா. இதில் நயன்தாரா சோலோவாக நடிக்கிறார். நெல்சன் என்ற புதுமுகம் இயக்குகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தின் ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாவது பாடலான கல்யாண வயசு என்ற பாடல் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது.
இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள விளம்பர வீடியோ வைரலாக பரவி வருகிறது. காமெடி நடிகர் யோகிபாபு, நயன்தாராவிடம் காதலை சொல்ல வருவது போன்று இருக்கிறது. அதனை நயன்தாரா கூலாக கேட்டுக் கொண்டிருக்கிறார். யோகி பாபுவின் காதல் வசனம் இது...
"வீட்டுக்குபோனா யாரையாவது கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்ற அப்பா, அத்தை பொண்ணாத்தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்ற அம்மா, பேரக் குழந்தைகளை பார்க்கணும்னு சொல்ற பாட்டி. இந்த டார்ச்சரெல்லாம் தாங்க முடியாம கடைக்கு வந்தால் என்னையே ஏக்கமா பாக்குற பொண்ணுங்க.
அவுங்கிட்டல்லாம் நான் ஒண்ணே ஒண்ணுதான் சொல்லியிருக்கேன்... கட்டினா அந்த பொண்ணத்தான் கட்டுவேன்னு. இதுவரைக்கும் அந்த பொண்ணு யாருன்னு யாருகிட்டேயும் சொன்னதில்லை. முதன் முதலா உங்ககிட்டதான் சொல்லப்போறேன்" என்று படு சீரியசாக யோகிபாபு சொல்வது ரசிக்கும்படியாக இருக்கிறது. இது வைரலாக பரவி வருகிறது.
#KalyaanaVayasu teaser for you 👇🏻
Full song video from Thursday, 17th May 😀@Siva_Kartikeyan lyrical 🤙🏻#Nayanthara #KolamaavuKokila @Nelson_director @LycaProductions @zeemusicsouth pic.twitter.com/ueKAyNMF2w
— Anirudh Ravichander (@anirudhofficial) May 14, 2018