‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக மின்னியவர்கள் மிகவும் குறைவானவர்களே. அப்படி ஜொலித்தவர்களில் முக்கியமானவர்கள் ஷாலினியும், மகேந்திரனும். நாட்டாமை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மகேந்திரன், 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாகவே நடித்துள்ளார்.
தாய்குலமே தாய்குலமே, கும்பகோணம் கோபாலு படத்தில் நடித்தற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான மாநில அரசின் விருதை பெற்றார். தேவி, லிட்டில் ஹார்ட்ஸ் என்ற தெலுங்கு படங்களுக்காக அந்த மாநில அரசின் விருது பெற்றார்.
அதன் பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். விழா, என்றும் அன்புடன், முதல் காதல் மழை, விரைவில் இசை, திட்டிவாசல் படங்கள் குறிப்பிடத்தக்கவை. ஆனாலும் அவரால் ஒரு ஹீரோவாக ஜெயிக்க முடியவில்லை. என்றாலும் மகேந்திரன் சினிமாவுக்கு வந்த வெள்ளி விழா ஆண்டு இது. அதிக படங்களில் குழந்தை நட்சதிரமாக நடித்தற்காக இன்டியா புக் ரிக்கார்ட்ஸ், தமிழ் நாடு புக் ரிக்கார்ட்ஸ், ஆர்ட்டிஸ்ட் வோர்ல்டு ரிக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம் பெற்றிருக்கிறார். ஹீரோவாக ஜெயிக்க தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார் மகேந்திரன்.