'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் | ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் | 2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் |

'காலா' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் மற்றும் சில திரையுலகப் பிரமுகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். விழாவில் ரஜினிகாந்த் அரசியல் கருத்துக்கள் எதையாவது முன் வைத்து பரபரப்பாகப் பேசலாம் என்று எதிர்பார்த்தார்கள்.
ஆனால், ரஜினிகாந்த் படத்தைப் பற்றியும், இயக்குனர் பா.ரஞ்சித் பற்றியும்தான் அதிகம் பேசினார். அவருடைய பேச்சில் அரசியல் என்பது அதிகமில்லை. நதிகள் இணைப்பு வேண்டும், கட்சி ஆரம்பிக்க நேரம் வரவில்லை, தமிழகத்திற்கு நல்ல நேரம் வரும் என்று மட்டுமே அவருடைய பேச்சில் இருந்த அரசியல் பேச்சாக இருந்தது.
ஆனால், படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் பேச்சு ரஜினிகாந்தை விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இருந்தது. ஐபிஎல் போராட்டத்தின் போது, காவல் துறையைத் தாக்கியவர்களைப் பற்றி கடுமையான கருத்துக்களைப் பதிவிட்டார் ரஜினிகாந்த். அதற்கு பாரதிராஜா, சீமான் உள்ளிட்டவர்கள் ரஜினிகாந்தை பலமாக விமர்சித்தார்கள். தனுஷின் பேச்சில் அவர்களுக்கான பதில்தான் இருந்தது.
“ரஜினிகாந்த்தால் வாழ்ந்தவர்கள் இப்போது அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் ரஜினிகாந்த் இந்த விழாவுக்கான அழைப்பிதழைக் கொடுக்கச் சொன்னார். அது தான் ரஜினிகாந்தின் பெருந்தன்மை”.
முதலில் வில்லன், குணசித்திர நடிகர், பிறகு ஹீரோ, ஸ்டார், சூப்பர் ஸ்டார், இன்று தலைவர், நாளை... உங்களைப் போல நானும் காத்திருக்கிறேன் என்று கூறினார்.
இதுவரை தான் செய்த நல்ல விஷயங்களை குறிப்பிட்டுப் பேசாதவர் ரஜினிகாந்த். அதேசமயம், தனுஷை இப்படிப் பேச வைத்து ரஜினிகாந்த் ஆழம் பார்க்கிறாரோ என்றும் சிலர் சந்தேகப்படுகிறார்கள்.