‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ரஜினி, ஹூமா குரேஷி, சமுத்திரகனி, நானா படேகர், சாயாஜி ஷிண்டே நடித்துள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கி உள்ளார், சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார், வுண்டர் பார் நிறுவனம் சார்பில் தனுஷ் தயாரித்துள்ளார். வருகிற ஜூன் 7ந் தேதி படம் வெளிவருகிறது.
காலா படத்தின் ஒளிபரப்பு உரிமத்தை பெற கடும்போட்டி இருந்தது. புதிதாக தொடங்கப்பட்ட கலர்ஸ் சேனலும், ஜீ, தமிழ் சேனலும் கடுமையாக மோதியது. இந்த நிலையில் காலாவின் ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் டி.வி.நெட் ஒர்க் நிறுவனம் வாங்கியுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் காலாவை ஸ்டார் நெட்ஒர்க் ஒளிபரப்பிக் கொள்ளலாம். எனவே காலா படம் தமிழில் விஜய் டி.வியில் தீபாவளிக்கு ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வளவு தொகைக்கு உரிமம் விற்கப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.