‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் நிகழ்ச்சியாக தனியார் தொலைக்காட்சியில் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது. நடிகை சங்கீதா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ஆர்யாவுக்கு ஏற்ற மணப்பெண்ணைத் தேர்ந்தெடுப்பது தான். இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு எதிராக தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் பாடலாசிரியர் விவேக்.
“8 வயது சிறுமியைக்கூட விட்டுவைக்காமல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்துவரும் நிலையில், 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சியில், பெண்களை இவ்வளவு இழிவாகக் காட்டுவது அத்துமீறல். ஆர்யாவைத் திருமணம் செய்து கொள்வதற்காக மட்டுமே அந்தப் பெண்கள் பிறந்ததுபோல் நிகழ்ச்சி உள்ளது. தமிழ்ப் பெண்களுக்கு நிச்சயம் இதைவிட அதிகமான மாண்பு இருக்கிறது என நினைக்கிறேன். தயவுசெய்து பெண்களை இழிவுபடுத்துவதை நிறுத்துங்கள்”
என டுவிட்டரில் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார் பாடலாசிரியர் விவேக்.
அவரது கருத்தைக் கேட்டதும் ஆர்யா வருத்தப்பட்டதோடு, விவேக்கு போன் செய்து பேசியதாகவும் தகவல் அடிபடுகிறது.