குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? |
டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்த நடிகை வித்யா பாலன் அளவுக்கு நான் தயாராகவில்லை என்று நடிகை அசின் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அசின், இந்தி கஜினி மூலம் பாலிவுட் திரையுலகிற்கு சென்றார். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தும் பெரிதாக அசினால் அங்கு பளிச்சிட முடியவில்லை. தமிழ் சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை என்று கூறி வந்த அசின், காவலன் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்தார். பின்னர் மீண்டும் பாலிவுட்டில் வாய்ப்பு வேட்டைகளில் பிஸியாகி விட்டார். தற்போது பாலிவுட்டில் அபிஷேக் பச்சன் மற்றும் அஜய்தேவ்கன்னுடன் நடித்து வரும் அசின் தமிழ்படங்களில் தலைகாட்டுவதே இல்லை.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பாலிவுட் படங்களிலேயே நான் கவனம் செலுத்திக்கொண்டிருப்பதாக வரும் தகவல்கள் உண்மையானது அல்ல. தென்னிந்திய அளவில் நான் ஒரு பிரபலமான நடிகை என்றாலும், பாலிவுட்டைப் பொறுத்த வரையில் நான் இன்னும் புதுமுக நடிகைதான். தென்னிந்திய படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. நல்ல ஸ்கிரிப்டை தேடிக்கொண்டிருக்கிறேன். நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் கண்டிப்பாக தமிழில் நடிப்பேன். சினிமாவில் யாரும் யாருக்கும் போட்டியாளர்கள் இல்லை. இங்கே அனைவரும் தங்களது திறமையான நடிப்பால் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது மட்டுமின்றி, நிலைநிறுத்திக் கொள்கிறார்கள், என்று கூறியுள்ளார்.
டர்ட்டி பிக்சர் படத்தில் வித்யாபாலன் நடித்தது போல் நீங்களும் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் அசின், டர்ட்டி பிக்சரில் வித்யா பாலன் நடித்ததைப் போல் என்னால் நடிக்க முடியாது. நான் இன்னும் அதுபோன்ற கேரக்டர்களில் நடிக்கும் அளவிற்கு தயாராகவில்லை, என்று கூறியிருக்கிறார்.