ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
தேசிய விருதுகளில், 5 விருது வாங்கிய இளையராஜாவை முந்தியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
65வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் முறையாக ஒரே நேரத்தில் இரண்டு தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
மாம் என்ற ஹிந்தி படத்தில் சிறந்த பின்னணி இசைக்காகவும், காற்று வெளியிடை படத்தில் சிறந்த இசை அமைத்ததற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சிறந்த இசை அமைப்பாளருக்காக, 5 தேசிய விருதுகளைப் பெற்று, இளையராஜா முதலிடத்தில் இருந்தார். ஏற்கனவே நான்கு விருதுகளை பெற்றிருந்த ரஹ்மான், இப்போது பெறவிருக்கும் இரண்டு விருதுகளையும் சேர்த்து, 6 விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதன் மூலம், இளையராஜாவை முந்தியிருக்கிறார் ரஹ்மான்.