ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் தமிழ்நாட்டில் உள்ள வேலூர்-ஐ சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம், 77 கிலோ பளு தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு ஜனாதிபதி உள்ளிட்ட நாட்டில் உள்ள பல தலைவர்களும், விளையாட்டு வீரர்களும், பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சதீஷ் சிவலிங்கம், நடிகர் அஜித்தின் தீவிர ரசிகராம். அதனால், காலையில் இருந்தே அவரை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 'விவேகம்' படம் வந்த போது அஜித்தை 'தல' எனக் குறிப்பிட்டு அந்தப் படத்தின் டீசர், போட்டோக்கள் ஆகியவற்றை சதீஷ் ஷேர் செய்ததை அவர்கள் குறிப்பிட்டுப் பாராட்டி வருகிறார்கள். அதனால், சதீஷ்குமார் இந்தியா திரும்பியதும் அவரை அஜித் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என அஜித் ரசிகர்கள் விரும்புகிறார்கள்.