கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
தேவயானி ஹீரோயினாக நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அவரது கணவர் ராஜகுமாரன் இயக்கி நடித்த திருமதி தமிழ் படத்தில் கூட அவர் இரண்டு நாயகிகளில் ஒருவராகத்தான் நடித்தார். அதன்பிறகு அக்கா அண்ணி வேடங்களில் நடித்தார்.
தற்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு எழுமின் என்ற படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இதில் தேவயானியுடன் ப்ரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா என்ற சிறுவர், சிறுமிகள் நடித்துள்ளனர். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் வி.பி.விஜி இயக்கி உள்ளார். படத்தை பற்றி அவர் கூறியதாவது:
தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே 'எழுமின்' படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. தேவயானி மகன் அர்ஜூனும் ஐந்து சிறுவர்களும் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். சிறுவர்கள் ஒன்றாக அகாடமியில் கராத்தே, குங்பூ, பாக்ஸிங் மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை பயில்கிறார்கள். வசதியில்லாத இந்த ஐந்து சிறுவர்களுக்கு அவர்களது பெற்றோர்களே தடையாக இருக்கையில், தேவயானியும் அவரது கணவரும் அந்த சிறுவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.
ஐந்து சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளும், வேறு சில எதிர்பாராத சூழ்நிலைகளையும் தாண்டி சிறுவர்கள் எப்படி சாதிக்கிறார்கள் என்பது புதிய கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும். 5 சிறுவர்களும் படத்தில் இடம்பெற்ற கடுமையான சண்டை காட்சிகளில் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் நிஜ வாழ்விலும் மாநில மற்றும் தேசிய அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. என்கிறார் இயக்குனர் வி.பி.விஜி.