‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் விசுவாசம் படத்தில் நடிக்க உள்ள அஜித், அடுத்து சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த படங்கள் தவிர பிரபு தேவா இயக்கத்தில் அஜித் ஒரு நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் அடிபடுகிறது. சமீபத்தில் அஜித்தை சந்தித்து ஒரு கதை சொல்லியிருக்கிறார் பிரபுதேவா.
அவர் சொன்ன கதை அஜித்துக்குப் பிடித்துவிட்டதாம். பக்காவாக ஸ்கிரிப்ட் ரெடி ண்ணுங்கள் இருவரும் இணைந்து படம் செய்யலாம் என்று சொல்லி அனுப்பியுள்ளார் அஜித். அதன் அடிப்படையில் அஜித் நடிக்க உள்ள படத்தின் ஸ்கிரிப்ட்டை தயார் செய்யும் பணியில் பிரபுதேவா ஈடுபட்டுள்ளார்.
இந்த படத்தை நயன்தாராவின் மானேஜர் ராஜேஷின் கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் தயாரிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. இந்நிறுவனத்துக்கு அஜித் கால்ஷீட் கொடுக்க வாய்ப்புள்ளது என்கின்றனர்.