‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விஜய் நடித்த தமிழன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான டி.இமான், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களுக்கு இசை அமைத்துள்ளார். எல்லா மொழிகளிலுமாக சேர்த்து 100 படங்களுக்கு இசை அமைத்துள்ள டி.இமானுக்கு டிக் டிக் டிக் நூறாவது படம்.
ஜெயம்ரவி நடித்துள்ள 'டிக் டிக் டிக்' படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து டி.இமானுக்கு அடித்த ஜாக்பாட்... அஜித்தின் 'விசுவாசம்' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பல மொழிகளில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ள டி.இமான், கன்னடத்தில் மட்டும் ஒரேயொரு படத்திற்குத்தான் இசை அமைத்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கிச்சா சுதீப் நடிப்பில் தமிழில் வெளியாகிய 'முடிஞ்சா இவனப்புடி' படத்தின் கன்னட பதிப்பு அது.
தற்போது மற்றுமொரு கன்னட படத்திற்கு இசை அமைக்கவிருக்கிறார் டி.இமான். கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமார் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
தமிழில் 'லிங்கா' படத்தை தயாரித்தவரும், நாச்சியார் படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ள 'ராக்லைன்' வெங்கடேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார். பவன் வாடையார் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார்.