பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் | கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி | என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! |

சகாப்தம், ஸ்ட்ராபெர்ரி படங்களுக்குப்பிறகு தெலுங்கில் ஜனதா கேரேஜ், மலையாளத்தில் மை ஸ்கூல் ஆகிய படங்களில் நடித்தார் தேவயானி. அதையடுத்து, தற்போது அட்டகத்தி தினேஷ் - அதிதி மேனன் ஜோடி சேர்ந்துள்ள களவாணி மாப்பிள்ளை என்ற படத்தில் நடிக்கிறார் தேவயானி. காந்தி மணிவாசகம் இயக்கும் இந்த படம் காதல் கலந்த காமெடி கதையில் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் நாயகியாக நடிக்கும் அதிதி மேனனுக்கு அம்மாவாக தேவயானி நடிக்கிறார். முதலில் அம்மா வேடம் என்றதும் தயங்கினாராம் தேவயானி. ஆனால் முழுக்கதையையும் கேட்டவர் அம்மா வேடத்திற்கு இருந்த முக்கியத்துவத்தைப் பார்த்து ஒத்துக்கொண்டு நடித்து வருகிறார்.
ஹீரோயினை தாண்டி, இதற்கு முன்பு செண்டிமென்ட், குணசித்ர வேடங்களில் அதிகமாக நடித்துள்ள தேவயானி, இந்த படத்தில் முதன்முறையாக அதிகப்படியான காமெடி காட்சிகளிலும் நடித்து ஸ்கோர் பண்ணிக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு தேவயானிக்கு ஜனரஞ்சகமான நடிகை என்ற பெயர் கிடைக்கும் என்கிறார்கள் அப்படக்குழுவினர்.