‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள இரண்டாவது படம் காலா. நடிகர் தனுஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் நானா படேகர், சமுத்திரகனி, ஈஸ்வரி ராவ், ஹூமா குரோஷி உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 27-ந்தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
ரஜினி புதிய கட்சியை அறிவிக்கத்தயாராகி வருவதால் அவரது ரசிகர்களை முன்பை விட இப்போது அதிகப்படியான உற்சாகத்தில் காணப்படுகிறார்கள். குறிப்பாக, காலா படத்தின் டீசர் மார்ச் 1-ந்தேதி ரிலீஸ் என்று தனுஷ் அறிவித்ததில் இருந்தே டீசரை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
இந்நிலையில், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் மறைவு காரணமாக, மார்ச் 1-ந்தேதியான இன்று வெளியாக இருந்த காலா பட டீசர் வெளியீட்டை நாளை அதாவது மார்ச் 2-ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளார் தனுஷ். ஆக, ரஜினியின் காலா டீசரை காண ரசிகர்கள் ஒருநாள் மட்டும் பொறுமை காக்க வேண்டும்.