பிளாஷ்பேக் : தாணுவுக்காக கவுரவ தோற்றத்தில் தோன்றிய ரஜினி | ரஜினி, கமல் மாதிரி தனுஷ், சிம்பு இணைகிறார்களா? | தமிழ் படங்களை புறக்கணிக்கிறாரா? சாய்பல்லவிக்கு என்னாச்சு? | யுவன் சங்கர் ராஜா இசை சுற்றுப்பயணம் | 'அங்காடி தெரு' மகேஷ் நடிக்கும் 'தடை அதை உடை' | ரஜினிகாந்த் மனசு மற்ற ஹீரோக்களுக்கு இல்லையே! | ஸ்வேதா மேனன் மீது நடவடிக்கை எடுக்க தடை நீடிப்பு | நடிகர் சங்க புதுக்கட்டடம்: விஜயகாந்த் பெயர் வைக்க சிக்கலா? | மருதத்தில் ஏமாற்றப்படும் விவசாயிகளின் கதை: விதார்த் | பிளாஷ்பேக்: சர்ச்சையில் சிக்கிய 'மனிதன்' |
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த முதல் படம் வீரம். அதன்பிறகு வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கிய சிவா, தற்போது நான்காவதாக அஜீத்தின் விசுவாசம் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க டி.இமான் முதன்முறையாக அஜீத் படத்திற்கு இசையமைக்கிறார்.
மேலும், இந்த படம் வடசென்னை கதையில் உருவாக இருப்பதாகவும் அஜீத் வடசென்னை தமிழ் பேசி நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது, விசுவாசம் படம் வீரம் படத்தைப்போன்று கிராமத்து கதையில் தயாராகயிருப்பதாக சொல்கிறார்கள். அந்த வகையில், வீரம் படத்தின் இரண்டாம் பாகம் போன்றே இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். அதோடு, வீரம் படத்தைப்போன்றே படம் முழுக்க வெள்ளை வேஷ்டி சட்டை கெட்டப்பில் நடிக்கிறாராம் அஜீத்.